பொதுமக்கள் கோரிக்கை
சேலம், அக்.9- இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் குவிந்துள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூ ராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகு தியில் பிரதான தொழில் ஜவுளி உற்பத்தி ஆகும். இதனால் இளம்பிள்ளை பகுதிக்கு ஜவுளி வாங்க பொதுமக்கள் மற்றும் வியா பாரிகள் என நாள்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந் நிலையில், இப்பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகமும் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.