tamilnadu

img

தருமபுரி: எருது விடும் திருவிழா

தருமபுரி, ஜன.17- பாலக்கோடு் அருகே உள்ள சிறியம்பம்பட்டி கிராமத்தில் நடை பெற்ற எருது விடும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாட்டுப் பொங்கலை முன் னிட்டு தருமபுரி மாவட்டம், பாலக் கோடு பகுதிகளில் மஞ்சுவிரட்டு எனப்படும் மாடுபிடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரி சையாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிரியம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் நிகழ்ச்சியில் 100க்கும் மேற் பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேளா தாளங்களுடன்  எருது விடும் திருவிழாவை கொண் டாடினர்.  அதனைத்தொடர்ந்து அலங்க ரிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக  ஒவ்வொன்றாக திறந்து விடப் பட்டன. சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு காளையை விரட்டிச் சென்றனர். இதனைக் காண 1000க்கும் மேற் பட்ட பொதுமக்கள் வந்திருந்து  கண்டு களித்தனர். 

பென்னாகரம் 

தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டத்தில் பொங்கல் திரு விழாவை முன்னிட்டு எருதாட்டம் திருவிழா நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், கே.அக்ரஹாரம் கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் பாரம் பரியமான எருதாட்டம் திரு விழா தொடங்கியது இதில் மடம்  கிராமம் அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களின் சார்பில் பல்வேறு  காளைகள் கலந்து கொண்டது. இந்த எருதாட்டம் 300 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வரு கிறது இதனைக்  காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் வந்தி ருந்தனர். இதேபோல் பென்னாகரம் வட்டத்தைச் சுற்றி உள்ள மோட்டு பட்டி ,கரியாம்பட்டி, மாங்கரை கிரா மங்களில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. 
 

;