tamilnadu

img

குடிநீர் பிரச்சனை: சாலை மறியல்

அவிநாசி, மார்ச் 3- கோடை காலம் தொடங்கியுள்ள நிலை யில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அவி நாசி அருகே செவ்வாயன்று சாலை மறி யல் நடைபெற்றது. அவிநாசி ஒன்றியத்தில் தத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட கூட்டப்பள்ளி பகுதி யில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆற்றுக் குடிநீருக்காக அருகில் உள்ள போத்தம் பாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்நிலை யில் கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பிரதானக் குழாயில் இருந்து பொதுக்குழாய் அமைக்கு முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலிப்பார் ஊராட்சி குடோன் காலனி பொதுமக்கள் அவிநாசி-கோபி சாலையில் மறியல் போரட்டத்தில்  ஈடுபட்டனர்.  இது குறித்து அப்பகுதி மக்கள் கூறிய தாவது, குடோன் காலனிக்கு விநியோகிக் கப்படும் பிரதானக் குழாயில் இருந்து பொதுக்குழாய் அமைத்தால், எங்கள் பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறையாகும். எனவே, புதிய குழாய் மூலம் பொதுக்குழாய் அமைக்க வேண்டும் என்றனர்.  தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தற்போதைக்கு கூட்டப்பள்ளி பகுதியில் பொதுக்குழாய் அமைத்துக் கொடுக்கப் படும். குடோன் காலனி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால், பொதுக் குழாய் துண்டிக்கப்பட்டு, புதிதாக குழாய் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்றனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 2 மணி நேரத்திற்கும் மேலாக  நடைபெற்ற போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

;