tamilnadu

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சேலம், டிச.23- சேலம், நாமக்கல், கோவை, திருப் பூர் ஆகிய மாவட்டங்களில்  வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெளி யிடப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில், அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி கள் முன்னிலையில் சேலம் மாவட்டத் தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிக ளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் வெளியிட்டார். இதில் கெங்கவல்லி (தனி)சட்டமன்ற தொகுதியில் ஆண் கள் 1,11,674 பேரும், பெண்கள் 1,17,423 பேரும், திருநங்கைகள் 2 பேரும் என மொத்தம் 2,29,099 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆத்தூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,18,784 பேரும், பெண்கள் 1,26,089 பேரும், திருநங்கைகள் 10 பேரும் என மொத்தம் 2,44,883 வாக்கா ளர்களும், ஏற்காடு (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,34,874 பேரும், பெண்கள் 1,39,323 பேரும், திருநங்கைகள் 13 பேரும் என மொத் தம் 2,74,210 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர். 

இதேபோல் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,46,310 பேரும், பெண்கள் 1,37,544 பேரும், திருநங்கைகள் 4 பேரும் என மொத்தம் 2,83,858 பேரும், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,40,596 பேரும், பெண்கள் 1,35,145 பேரும், திருநங்கைகள் 6 பேரும் என மொத்தம் 2,75,747 வாக்கா ளர்களும், எடப்பாடி சட்டமன்ற தொகு தியில் ஆண்கள் 1,40,724 பேரும், பெண்கள் 1,34,534 பேரும், திருநங் கைகள் 15 பேரும் என மொத்தம் 2,75,273 வாக்காளர்களும், சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,34,376 பேரும், பெண்கள் 1,30,236 பேரும், திருநங்கைகள் 13 பேரும் என மொத்தம் 2,64,625 வாக்கா ளர்களும், சேலம் (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,44,121 பேரும், பெண்கள் 1,43,831 பேரும், திருநங்கைகள் 41 பேரும் என மொத்தம் 2,87,993 பேரும், சேலம் (வடக்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண் கள் 1,30,998, பெண்கள் 1,36,258, திரு நங்கைகள் 12 பேரும் என மொத்தம் 2,67,268 வாக்காளர்களும், சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண் கள் 1,25,195 பேரும், பெண்கள் 1,29,916 பேரும், திருநங்கைகள் 19 பேரும் என மொத்தம் 2,55,130 பேரும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,26,023 பேரும், பெண்கள் 1,23,737 பேரும், திருநங்கைகள் 3 பேரும் என மொத்தம் 2,49,763 பேரும் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ள னர். மாவட்டத்தில் மொத்தம் 29 லட்சத்து 7 ஆயிரத்து 849 வாக்கா ளர்கள் வரைவு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.  வாக்காளர் பட்டியல் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள் ளிட்ட சுருக்குமுறை திருத்தப்பணி களுக்கான படிவங்களை டிச.23 முதல் ஜன.22 வரை அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவல கங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவ லகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங் களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க லாம். மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6  சட்டமன்றத் தொகுதிகளிலும், கடந்த மார்ச் 26 முதல் டிச.16 வரை வாக்கா ளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முக வரி மாற்ற பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை  விசாரணை செய்து வரைவு வாக்காளர் பட்டியலானது வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இராசிபுரம் (தனி) சட்ட மன்ற தொகுதியில் 1,13,150 ஆண், 1,17,371 பெண் வாக்காளர்கள், திரு நங்கைகள் 1 என மொத்தம் 2,30,522 வாக்காளர்களும், சேந்தமங்கலம் (பகு) சட்டமன்ற தொகுதியில் 1,15,945 ஆண், 1,19,865 பெண் வாக்காளர்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 2,35,827 வாக்காளர்களும், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள்- 1,21,053 பெண்கள்-1,28,485, திருநங் கைகள் 37 என மொத்தம் 2,49,575 வாக்காளர்களும், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,03,938 ஆண்கள்,1,10,566 பெண்கள், 6 திரு நங்கைகள் என மொத்தம் 2,14,510 வாக்காளர்களும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1,08,950 ஆண்கள்,1,14,033 பெண்கள், 35 மற்ற வர்கள் என மொத்தம் 2,23,018 வாக்கா ளர்களும், குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதியில் 1,19,887 ஆண், 1,24,365 பெண், 26 திருநங்கைகள் என மொத்தம் 2,44,278 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.  மாவட்டத்திலுள்ள மொத்த ஆண் வாக்காளர்கள் 6,82,923, பெண் வாக் காளர்கள் 7,14,685, திருநங்கைகள் 122 என 13 லட்சத்து 97ஆயி ரத்து 730 வாக்காளர்கள் இடம் பிடித் துள்ளனர். இதில் புதியதாக வாக்கா ளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் 7,016பேர். நீக்கபட்டவர்கள் 2,719 பேர்.புதியதாக சேர்க்கப்பட்டவர் களுக்கு வாக்காளர் புகைப்பட அடை யாள அட்டைகள்  சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும். 

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டி யல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஆட்சி யர் கு.இராசாமணி தலைமை தாங்கி வாக்காளர் பட்டியலை வெளியிட் டார். இதன்படி, கோவை மாவட்டத் தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதி யில் ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 48 ஆயிரத்து 31 பேரும், பெண் வாக்கா ளர்கள் 14 லட்சத்து 75 ஆயிரத்து 461 பேரும், மாற்று பாலினத்தவர் 345 பேர் என மொத்தம் 29 லட்சத்து 23 ஆயி ரத்து 837 பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியயில் இடம் பெற்றுள்ளனர். 

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டி யலில் எட்டு சட்டமன்றத் தொகுதி களில் மொத்தம் 22 லட்சத்து 49 ஆயி ரத்து 650 வாக்காளர்கள் இடம் பெற் றுள்ளனர். தாராபுரம் தனி தொகுதியில் 251871 வாக்காளர்க ளும், 297 வாக்குச் சாவடிகளும், காங் கேயம் தொகுதியில் 247482 வாக்கா ளர்களும், 292 வாக்குச் சாவடிகளும், அவிநாசி தனி தொகுதியில் 266347 வாக்காளர்களும், திருப்பூர் வடக்கு தொகுதியில் 358554 வாக்காளர்கள், 362 வாக்குச்சாவடிகள், திருப்பூர் தெற்கு 263407 வாக்காளர்கள், 234 வாக்குச் சாவடிகள், பல்லடம் தொகு தியில் 365765 வாக்காளர்கள், 407 வாக்குச் சாவடிகள், உடுமலைப் பேட்டை 258287 பேர், 293 வாக்குச் சாவடிகள், மடத்துக்குளம் தொகுதி யில் 237937 வாக்காளர்கள் மற்றும் 287 வாக்குச் சாவடிகள் இடம் பெற்றுள் ளன. திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்கா ளர்கள் 13 ஆயிரத்து 495 பேர் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.