tamilnadu

கொலை வழக்கு குற்றவாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள்

கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை, ஜன.31-  கோவையில் பட்டப்பகலில் பழிக்குப் பழி யாக நடந்த இருவர் கொலை வழக்கில் குற்றவா ளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து கோவை  நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா தீர்ப்ப ளித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் 22ஆம்  தேதி கோவை செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாநகராட்சி கழிவறை அருகே ஆனந்த குமார், செல்வராஜா ஆகிய இருவரை பட்டப்பகலில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சி.சூர்யா (20), விக்னேஷ்குமார்(22), பேரூர் சாலையைச் சேர்ந்த சூர்யா (20), மோகன்ராஜ் (22) ஆகியோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ரியல் எஸ்டேட் அதிபர் வினோத்குமார் கொலை  வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்த  செல்வராஜ், தங்களையும் கொலை செய்துவிடு வதாக மிரட்டியதாகவும், அதனால் அவரை கொலை செய்ததாக தெரிவித்தனர். நீதிமன்றம் சென்று கையெழுத்திட்டுவிட்டு ஆட்டோவில் வந்த செல்வராஜைத் தடுத்து நிறுத்தி வெட்டியதாகவும், அப்போது தடுக்க வந்த ஆனந்தனையும் வெட்டி யதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த கொலையில் போளுவாம்பட்டியில் உள்ள  இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த விஜய்ரா ஜுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, விஜயராஜையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற  நீதிபதி மலர் வாலண்டினா வெள்ளியன்று  தீர்ப்பு வழங்கினார். அப்போது, குற்றவாளி கள் சி.சூர்யா, ஆர்.சூர்யா,மோகன்ராஜ், விக்னேஷ் குமார், விஜயராஜ் ஆகிய 5 பேருக்கும் இரட்டை  ஆயுள் தண்டனையும், தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

;