tamilnadu

img

விலை போகாத கருவேப்பிலை – கவலையில் விவசாயிகள்

மே.பாளையம், ஜூன் 14- கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட விலை இறக்கத்தால் போதிய லாபம் இல்லையென கருவேப்பிலை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தின், மேற்குத்தொ டர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழைக்கு அடுத்த படியாக கருவேப்பிலையே அதிகம் பயிர டப்பட்டு வருகிறது. சுமார் மூன்றாயிரம் ஏக் கர் பரப்பளவில் இங்கு கருவேப்பிலை விவ சாயம் நடைபெற்று வரும் நிலையில் இங்கி ருந்து தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா கர்நாடகாவிற்கும் உள்ளிட்ட மாநிலங்க ளுக்கும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதற்காக கேரளா உள்பட பல இடங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் மேட்டுப் பாளையம் வருவார்கள். இந்நிலையில், கொரோனா பொது முடக்கதால் கடந்த  இரண்டு மாதங்களுக்கும் மேலாக வியாபாரி களின் வருகை முற்றிலுமாக தடைபட்டு விட்டது. இதனால் விளையும் கருவேப்பி லையை வாங்க ஆளின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சரக்கு போக்குவரத்தில் உள்ள பிரச்சனை கள் நீடிப்பதால் கருவேப்பிலை விற்பனை தொடர்ந்து முடங்கியே உள்ளது.  

இப்பகுதியில் அதிகளவில் கருவேப் பிலை விளையும் நிலையில் தற்போது உள் ளூர் சந்தை மற்றும் சிறு கடைகளில் மட் டுமே மிக குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது. உள்ளூர் விற்பனையில் சுமார் ஐந்து சதவீதம் போக மீதமுள்ள அனைத் தும் தேக்கமடைந்து யாருக்கும் பயனின்றி வீணாகின்றன. இதனால் இதுவரை கிலோ முப்பது முதல் நாற்பது ரூபாய் வரை என விலை போன கருவேப்பிலை தற்போது கிலோ ஐந்து ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது. ஏக்கருக்கு நாற்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்து விளைவிக்கப்படும் கருவேப்பிலைக்கு தற்போது இரண்டாயி ரம் ரூபாய் கூடகிடைப்பதில்லை, இது வெட்டு செலவுக்குக்கூட போதாது என வேதனை தெரிவிக்கும் இப்பகுதி விவ சாயிகள், கொரோனா கால முடக்கம் தங்களை பெரிதும் பாதித்துள்ளதாகக் கூறுகின்றனர். கேரளாவில் உள்ளது போல் கருவேப்பிலையை பதப்படுத்தி மருத்துவ தேவைக்காக அதில் இருந்து எண் ணெய் மற்றும் பொடிகள் தயாரிப்பு தொழிற் சாலை இங்கிருந்திருந்தால் இது போல கரு வேப்பிலைக்கு விலை கிடைக்காமல் வீணாகி இருக்காது என்றும் இந்நிலை நீடித் தால் விவசாயத்தை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என வேதனை தெரிவித் துள்ளனர்.

;