கோவை, ஜூன் 10 - அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநரிடம் கூடுதல் கலெக்சன் கேட்டு கொரோனா பரவலை அதி கரிக்க போக்குவரத்து கழக நிர்வா கமே காரணமாய் இருக்க வேண் டாம் என சிஐடியு அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சங்கம் வலியு றுத்தியுள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் செய்யப் பட்டு வரும் நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின் றனர். 50 சதவிகித அரசு பேருந்துகள் 60 சதவிகித பயணிகளுடன் இயக் கப்பட்டு வருகிறது. இந்நிலை யில் குறைவாக ஓடும் பேருந்துகளா லும், பயணிகளின் கூட்டம் அதிக ரிப்பாலும் அரசு பேருந்து ஓட்டுநர் கள், நடத்துநர்கள் திணறி வருகின்ற னர். இதுகுறித்து, போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் தெரிவித் தால் அவர்கள் கலெக்சன் அதிகம் வேண்டும் என தெரிவிப்பதாக சிஐ டியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து, சிஐடியு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்கத்தினர், புத னன்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து இச்சங்கத் தின் பொதுச்செயலாளர் வேளாங் கண்ணிராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பேருத்துகளில் கூடு தல் பயணிகளை ஏற்றச்சொல்லி போக்குவரத்து அதிகாரிகள் நிர்பந் தம் செய்கின்றனர். பேருந்து நிலை யத்தில் நின்று அதிகளவு ஆட்களை அவர்களே ஏற்றி அனுப்புகின்றனர். அதிக அளவு வசூல் தொகையை காட்ட வேண்டும் எனவும் நடத்து நரை போக்குவரத்து அதிகாரிகள் நிர்பந்தம் செய்கின்றனர். அரசு தனி மனித இடைவெளி குறித்து ஒருபு றம் பேசுகிறது, மறுபுறம் போக்குவ ரத்து கழக அதிகாரிகள் கலெக்சன் கேட்பது முரண்பாடாக இருக்கி றது. பேருந்தில் அதிக அளவு பய ணிகள் ஏற்றப்படுவதால் தனி மனித இடைவெளியை கடைபி டிக்க முடிவதில்லை. பேருந்தில் முகக்கவசம் அணியாத பயணிகளை ஏற்ற மறுத்தால் அவர்கள் வழித்த டத்தில் தகராறு செய்கின்றனர்.
இதனால் போக்குவரத்து ஊழியர்க ளுக்கும், பயணிகளுக்கும் மோதல் போக்கு உருவாகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்கி தொற்றில் இருந்து மக்களையும், ஊழியர்களை யும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் பேருந்துகள் 5 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு முறை மட்டுமே சுத்தம் செய் யப்படுகின்றது. கொரோனா சமூக பரவலாக மாற போக்குவரத்து கழ கமே காரணமாகிவிடக்கூடாது. இரவு 9 மணியில் இருந்து அதி காலை 5 மணி வரை ஊரடங்கு என மத்திய, மாநில அரசுகள் அறி வித்துள்ளது.
ஆனால், இரவு பணிக்கு பணிமனை தொழிலாளர் கள் கட்டாயம் வரவேண்டும் எனவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். ஆகவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள் ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என தெரிவித்தார். முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசமாணியை சந்தித்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்ம நாபன், சிஐடியு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் தலைவர் பரமசிவம், பொருளாளர் கோபால் மற்றும் ஜான்கென்னடி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.