கோவை,டிச.24- ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் வாக்கு எண்ணும் மையங்களில் கோவை மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஜி.கோவிந்த ராஜ் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கு. இராசாமணி ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.. கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடை பெறவுள்ளது. அதன்படி, கோவை மாவட் டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவி களுக்கு நேரடித் தேர்தல் நடைபெற வுள்ளது. கோவை மாவட்டத்தில் மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி(வடக்கு), பொள்ளாச்சி(தெற்கு), ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் டிச.27ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், காரமடை, அன்னூர், சர்க்கார்சாமக்குளம், பெரிய நாயக்கன்பாளையம், சூலூர், தொண்டா முத்தூர், சுல்தான்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் டிச.30ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குபதிவும் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 1520 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப் பெட்டிகள் என மொத்தம் 6080 வாக்குப்பெட்டிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலிருந்து வாக்குச் சாவடி களுக்கு அனுப்ப தயார்நிலையில் வைக்கப் பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவு நாளன்று 12,060 வாக்குப்பதிவு அலுவ லர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை பணியில் 3,894 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில்,நிலைப்பள்ளி மற்றும் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை செவ்வா யன்று கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்ஜி.கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்\மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி ஆகி யோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர். மேலும், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றி யத்திலுள்ள டி.இ.எல்.சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, ஆகிய பள்ளிகளில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அங்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, வாக்கு எண்ணிகையின்போது வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர ஏதுவாக தடுப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் பாது காப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிப்பிடம், மின் வசதி ஆகிய வசதிகள் உரிய முறையில் மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஜி.கோவிந்தராஜ்மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்\மாவட்ட ஆட்சியர் கு.இராசா மணி ஆகியோர் சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிட்டனர். இவ்வாய்வில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சுஜித்குமார், வட்டாட் சியர்கள் சங்கீதா, பழனிச்சாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்