tamilnadu

தருமபுரி , சேலம் முக்கிய செய்திகள்

இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள் - பயணிகள் அவதி

தருமபுரி, செப்.15- அரூர் பேருந்து நிலையத்திற்குள் இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் வராமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  தருமபுரி மாவட்டம், அரூர் வழியாக  சேலம், வேலூர், பெங்களூரு, திருவண்ணா மலை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு 70க்கும் மேற் பட்ட அரசு பேருந்துகள்  இயக்கப்படு கின்றன. இந்நிலையில், இரவு நேரங்களில் அரூர் பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள்  வருவதில்லை. மாறாக  புற வழிச்சாலை வழியாக சென்று விடு கின்றன. இதனால் இரவு நேரத்தில் கைக் குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும்  முதியவர்கள் உள்ளிட்டோர் புறவழிச்  சாலையிலிருந்து  1 கி.மீ.,தூரமுள்ள  பேருந்து நிலையத்திற்கு  நடந்து செல் கின்றனர்.  இதுகுறித்து பல முறை பயணிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எனவே, இரவு நேரங்களில் அனைத்து அரசு பேருந்துகளும் அரூர் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் நீதிமன்றத்தில்  1001 வழக்குகளுக்கு தீர்வு

தருமபுரி, செப்.15- தருமபுரி மாவட்டத்தில் சனியன்று நடை பெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1001 வழக்குகளுக்கு  தீர்வு காணப்பட்டது. தருமபுரி அருகே தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கந்தகுமார் தலைமை  வகித்து தொடக்கிவைத்தார். மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி கே. சீதாராமன் முன்னிலையில், சமரச வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.  இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.ஜீவானந்தம், மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.பரமராஜ் உள்பட 10 நீதிபதிகள் தலைமையில் தனித்தனியாக விசாரணைகள் நடைபெற்றன. இதேபோல, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் நீதிமன்றங்களில் நான்கு அமர்வுகள் நடைபெற்றன. இதில், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு, குடும்பநல வழக்கு, ஜீவனாம்சம், காசோலை, விபத்து, குற்றவியல் என,  3,593 வழக்குகளில், 902 வழக்குகளுக்கு நபர்கள் ஆஜராகி,  ரூ.2 கோடியே, 92 ஆயிரத்து, 751-க்கு சமசர தீர்வு காணப்பட்டது. வங்கி வாராக் கடன் வகையில், 3,750 வழக்குகள் இருந்தன. இவற்றில், 99 வழக்குகளுக்கு உரிய நபர்கள் ஆஜராகியதில், ரூ.ஒரு கோடியே, 16 லட்சத்து, 40 ஆயிரத்து, 604-க்கு தீர்வு காணப்பட்டது. மாவட்டம் முழுவதும், மொத்தம் 14 அமர்வுகளில், 1,001 வழக்குகளில், ரூ.3 கோடியே, 81 லட்சத்து, 33 ஆயிரத்து, 355-க்கு சமரச தீர்வு காணப்பட்டது. 

பூம்புகாரில் சிறப்பு கண்காட்சி

சேலம், செப்.15- பூம்புகாரில் சிறப்பு  பொம்மை கண்காட்சி  மற்றும் விற்பனையை  மாவட்ட வருவாய் அலு வலர் துவக்கி வைத்தார். கைவினை என்ற தொன் மையான கலையை பாது காப்பது மட்டுமின்றி கை வினை கலைஞர்களின்  வாழ்வாதாரத்தை மேம் படுத்தும் வகையில் தமிழ் நாடு கைத்தறித் தொழில் கள் வளர்ச்சி கழகத்தின்  சார்பில் ஒவ்வொரு  பண்டிகைக் காலங்களிலும் கண்காட்சிகள் நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலை யில் இந்தாண்டு நவ ராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சேலத்தில் கொலு பொம்மைகளின்  சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் துவக்கி வைத்தார்.  ஒரு மாத காலம்  நடைபெறும் இக்கண்காட்சியில் 10 சத விகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும்  கடந்தாண்டு ரூ.15 லட்சத் திற்கு விற்பனை செய்யப் பட்ட நிலையில், நடப் பாண்டில் ரூ.20 லட்சம் விற்பனை  இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

;