tamilnadu

தருமபுரி ,இளம்பிள்ளை முக்கிய செய்திகள்

காதார ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

இளம்பிள்ளை, நவ.20- டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இரும்பாலை அருகே உள்ள கீர பாப்பம்பாடி ஊராட்சி  பகுதியில் திங்க ளன்று இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார  நிலைய ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணி நடை பெற்றது. அப்போது, ஓலைப்பட்டி பகுதியில் அங்கன்வாடி மையம் அருகே ஒரு  வீட்டில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவு களை அகற்றவும், குளோரின் பவுடர்  தெளிக்கவும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்  சென்றுள்ளனர். ஆனால், இதற்கு அப் பகுதியை சேர்ந்த கோபால் மகன் கோவிந்த ராஜ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து பணியில்  ஈடுபட்டிருந்த பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தும், தகாத வார்த் தையால்  பேசியும், மிரட்டல் விடுத்துள் ளார்.  இதனையடுத்து சுகாதார ஆய்வாளர் அன்பழகன் இரும்பாலை காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  ஆய்வாளர் மோகன் விசாரணை மேற் கொண்டார். இந்த விசாரணையில்  கோவிந்தராஜ் மீது அரசு ஊழியளுக்கு மிரட்டல் விடுத்ததுடன்,  பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய 4 பிரிவுகளில் கோவிந்தராஜன் மீது வழக்குப் பதிந்து  கைது செய்தனர். ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர் டெங்கு  ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால்  அவர்கள் மீது கடும்   நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க மானியம்

 தருமபுரி, நவ.20- தருமபுரி மாவட்டத்தில் வேளாண் இயந் திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி கூறியுள்ளார்.  சிறு, குறு விவசாயிகள் அதிக விலை யுள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும்  கருவிகளை சொந்தமாக வாங்கி பயன் படுத்த இயலாததை கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைத் திட 40 சதவிகித மானியம் என்ற அடிப் படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம்  வரை மானியம் வழங்கப்படும்.  இவ்வாறான  மையங்களை அமைத்திட முன்னோடி விவ சாயிகள், விவசாய சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் போன்றோர் முன்வரலாம்.  இந்த மானியத் தொகையில் பொதுப்பிரி வினருக்கு ரூ.5 லட்சமும், ஆதி திராவிட  பிரிவினருக்கு ரூ.3  லட்சமும் தேசியமயமாக் கப்பட்ட வங்கியில் பயனாளியின் ‘மானிய இருப்பு நிதிக் கணக்கில்’’ 2 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் சேமிப்பு வங்கிக் கணக்கில்  நேரடியாக செலுத்தப்படும். 2 ஆண்டு களுக்கு பின் பயனாளிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட செயற் பொறியாளர் (வே.பொ) சரிபார்த்த பிறகு மானிய இருப்புத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் திரும்ப வழங்கப்படும். எனவே, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க  விரும்புவோர் உடனடியாக தருமபுரி வரு வாய்  கோட்டத்தில் உள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு  எம். பாஸ்கரன்  செயற்பொறியாளர் (வே.பொ)  தருமபுரி மாவட்டம் 94432 21695  என்ற கைபேசி என்ற எண்ணிற்கும், சம்பந் தப்பட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ), தருமபுரி ப.அறிவழகன் 94432 67032  என்ற கைபேசி எண்ணிற்கும், உதவி செயற் பொறியாளர்(வே.பொ) அரூர் கே. ஜெயக்குமார் 94432 49495 என்ற கைபேசி  எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பயன டையுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி தெரிவித்துள்ளார். 

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஒருவர் கைது 

தருமபுரி, நவ.20- 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட  நபரை போக்சோ  சட்டத்தில்  ஊத்தங்கரை காவல்துறை யினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திற்குட் பட்ட   கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜசேகர் (24). இவர் மொரப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து  வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.  இச்சிறுமி செவ் வாயன்று அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமியிடம் ராஜசேகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அதிர்ச்சியடைந்த அவர்கள் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித் தனர். இப்புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல் துறையினர் ராஜசேகரை  போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்  பதிவு செய்து கைது செய்தனர்.

சட்டையம்பட்டிக்கு பேருந்துகளை இயக்க கோரிக்கை

 தருமபுரி, நவ.20- அரூர் அருகேயுள்ள சட்டையம்பட்டிக்கு கூடுதல் அரசு நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம்,  அரூர் வட்டம், மத்தியம்பட்டி கிராம  ஊராட்சிக்குட்பட்டது சட்டையம்பட்டி கிராமம். இக்கிரா மத்துக்கு ஊத்தங்கரை-தீர்த்தலை இடையிலான வழித் தடத்தில் அரசு நகர பேருந்து (தடம் எண்.யு6) இயக்கப் படுகிறது. இப்பேருந்து காலை 9 மணி மற்றும் மதியம் 3.30 மணியளவில் இருமுறை வந்துச் செல்கிறது.  இதே  பேருந்து இரவு நேரத்தில் 8 மணியளவில் ஊத்தங்கரையில் இருந்து தீர்த்தமலைக்கு சென்று வருகிறது. ஆனால், இரவு  நேரத்தில் செல்லும் (யு6) அரசு பேருந்து சட்டையம் பட்டிக்கு வருவதில்லை. இதனால்,  மருத்துவ வசதிக்காக  தீர்த்தமலை, அனுமன்தீர்த்தம், ஊத்தங்கரை செல்வதற் கான பேருந்து வசதிகள் இல்லாமல் சட்டையம்பட்டி கிராம  மக்கள் அவதியுற்று வருகின்றனர்.   எனவே, அரசு நகர பேருந்து (யு6)  இரவு நேரங்களில் சட்டையம்பட்டி வழியாக வந்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- இளம்பிள்ளையில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

இளம்பிள்ளை, நவ.20- இளம்பிள்ளை அருகே பள்ளி சிறுமிக்கு டெங்கு காய்ச்சல்  அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து சுகா தாரத் துறையினர் வீடு, வீடாக ஆய்வு நடத்தி டெங்கு  கொசு புழுக்கள்  ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள ஆட்டை யாம்பட்டி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சியில் சாக்ரட்டீஸ் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் ஆனந்த் என்பவரின் மகள்  தீபிகா (8). இச்சிறுமி அதே ஊரில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதியன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்ற நிலையில்,   மேல் சிகிச்சைக்காக கடந்த 10ஆம்  தேதியன்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.   இதைத்தொடர்ந்து அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை  செய்யப்பட்டதில் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அணுக்கள்  குறைவால் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அச்சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில்  வீரபாண்டி வட்டார சுகா தார துறையினர் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் சாக்ரடீஸ் நகரில் வீடு வீடாகச் சென்று  லார்வா புழுக்கள் உள்ளதை கண்டறிந்து அதனை அகற் றினர். இருப்பினும், டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.