tamilnadu

img

சிஏஏ-வை திரும்பப்பெற வலியுறுத்தி தர்ணா

மேட்டுப்பாளையம், மார்ச் 7- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு தவஹித் ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதி வேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தர்ணா போராட் டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனி பகுதியில் நடைபெற்ற இத்தர்ணா போராட்டத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளானோர் பங் கேற்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என் பிஆர், என்ஆர்சி சட்டங்களை கண்டித்தும் இச்சட் டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப் பினர். இப்போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து நகரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.