ஈரோடு,டிச 16- ஈரோடு திண்டல் பகுதி யைச் சேர்ந்தவர் பிரகாஷ் கட்டிட தொழிலாளி. இவ ருக்கும் நந்தினி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இரு வரும் கடந்த 9-ஆம் தேதி அந்தியூர் கோவிலில் திரு மணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரகாஷ்- நந்தினி தம்பதியினர் திங் களன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம டைந்தனர்.