கோவை, ஆக. 17- கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப் புகள் தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர்.இந்நிலையில் திங்க ளன்று கோவை மாவட்டத் தில் மேலும் 405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டது. இதனால் கோவை மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 9 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் பலி எண்ணிக்கை யும் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. மொத்த பலி எண் ணிக்கை 196 ஆக உயர்ந் துள்ளது. கொரோனா பாதிப்பு நகரப்பகுதியில் மட் டும் அதிகரித்து வந்த நிலை யில், தற்போது கிராமப்புறப் பகுதியில் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.