tamilnadu

கோவையில் மேலும் 303 பேருக்கு கொரோனா: பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது

கோவை, ஜூலை 30 -  கோவை மாவட்டத்தில் வியாழனன்று 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகி றது.  கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்நிலையில், வியாழனன்று கோவை மாவட்டத்தில் 303 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது. கோவை மாவட்டத்தில் காவல் துறையினரும் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வரு கின்றனர்.

இந்நிலையில், அன்னூர் காவல் நிலையத் தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்புப் பிரிவு தலைமை காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல் உதவி  ஆய்வாளரின் மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள் ளது. உதவி ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி வீட் டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறப்புப் பிரிவு தலைமைக் காவலர் இஎஸ்ஐ மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை யடுத்து அன்னூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. காவல் நிலையத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் காவல் நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

;