tamilnadu

img

உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு தரவேண்டும் - ஆட்சியர்

தருமபுரி, டிச.13- உள்ளாட்சி தேர்தலை அமைதி யாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு அனைத்து கட்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதி ஆகிய 2 நாட்களில் நடை பெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் உள்ளாட்சி  தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப் பட்ட அனைத்து அரசியல் கட்சி களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோ சனைக்கூட்டம் வெள்ளியன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர்  அலுவ லகத்தில்  நடைபெற்றது. கூட்டத் திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.  மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   ராஜன், மாவட்ட வருவாய் அலுவ லர்கள் ரகமத்துல்லாகான், சங்கர், சார் ஆட்சியர் பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராம தாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்   எஸ்.மலர்விழி பேசியதாவது, தரும புரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை விதிமுறைகளின்படி நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடத்த தேவையான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளன. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உரிய ஒத்து ழைப்பை அளிக்க வேண்டும். மாவட் டத்தில் எந்த பகுதியிலாவது தேர்தல்  நடத்தை விதிமுறைகள் மீறப் பட்டால் அதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் உள்ள  தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு  உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.  இதேபோல் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தேர்தல்  கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டு உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரத்திற்கு விதிமுறைகளின்படி விண்ணப்பித்து அனுமதியை பெற லாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பிரச்சார அனுமதி வழங்கப்படும். அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி  கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். மாவட்டம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இவற்றில் உரிய பாது காப்பு மற்றும் கண்காணிப்பு பணி  மேற்கொள்ளப்படும் என பேசி னார். இக்கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமு கர்கள் பங்கேற்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

;