tamilnadu

img

சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி சிறப்பிடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு

சேலம், ஆக.30-  சர்வதேச அளவிலான  சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த சேலத் தை சேர்ந்த மாணவன்  பாராட்டப்பட்டார். சேலம் மரவனேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆண்டு  விளையாட்டு விழா வெள்ளி யன்று நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம்  தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவ, மாணவி களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து நடப்பு கல்வி யாண்டில் பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற  600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.  இதில் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சதுரங்க  விளையாட்டு போட்டியில் 3 ஆம் இடத்தை பிடித்த 11 ஆம் வகுப்பு மாணவன் நவீன் என்பவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.