tamilnadu

காற்றில் பறக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் பள்ளிகள்

 கோவை, ஜூன் 7- இலவசக் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி கோவை மாவட்ட தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் ஏழை மாணவர்களுக் கான சேர்க்கை நிராகரித்து வரு வதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. மத்திய அரசு கடந்த 2009ஆம் ஆண்டு நிறைவேற்றிய இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையில் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள் மற்றும் சமூகத் தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவிகிதத்தை ஒதுக்க வேண்டும். இச்சட்டத்தின் கீழ் சேரும் குழந்தை களின் பெற்றோரது ஆண்டு வரு மானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கும் பள்ளியை தேர்வு செய்து கொள்ளலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, விண் ணப்பம் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை ஒவ்வொரு குழந் தைக்கும் தனியார் பள்ளியில் படிப்புக்கான கட்டணத்தை அரசு செலுத்தும்.  கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் இந்த 25 சத விகித இட ஒதுக்கீட்டின் படி, இந்தாண்டு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மட்டும் 3 ஆயிரத்து 805 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இந்த நிலையில், சில தனியார் பள்ளிகள் கொள்ளை லாபத்திற்கு ஆசைப் பட்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஏழைகளின் குழந் தைகளை பள்ளிகளில் சேர்க்க மறுப்பு தெரிவிப்பதாகப் பெற் றோர் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பெற்றோர் கூறு கையில், ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத் தின் படி எங்கள் குழந்தையைச் சேர்ப்பதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவகத்தில் விண்ணப்பித்திருந்தோம். உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததால் எங் கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பள் ளிக்கு சேர்க்கைக்காகச் சென் றோம். அப்போது, ஏற்கனவே 25 சதவிகித இடங்களும் நிரப்பப்பட் டுள்ளன என்று பள்ளி நிர்வாகம் அறிவிக்கிறது. ஆனால், அதற் கான எந்த ஒரு ஆதாரமும் பள்ளி நிர்வாகத்தினர் காண்பிக்க வில்லை. பல நாட்களாக அலைந்த எங்களுக்கு மன உளைச்சல் மட் டுமே மிச்சமாகியுள்ளது என்ற னர். தனியார் சுய நிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால் அவற்றை மதிக்காத தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண் டும் நிர்பந்தப்படுத்தி வசூலிக்கி றது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் மாணவர்களி டமும், அரசு வழங்கும் கல்வி கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு மீதி தொகையை மாணவர்களிடம் வசூலிக்கிறது. இவற்றை செலுத்த மறுப்போருக்கு சேர்க்கை வழங்கு வதில்லை. இதனை மாவட்ட கல்வித்துறையினர் கண்டு கொள் வதில்லை. பெயரளவில் ஒரு சில ருக்கு சேர்க்கையளிக்கின்றனர். கட்டாயக் கல்வி உரிமைச் சட் டப்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்காக ஒதுக் கப்பட்ட இடங்கள் முழுமையாக நிரப்பப்படுவது இல்லை. 25 சத விகித இட ஒதுக்கீடு தொடர்பாக மாவட்ட கல்வித்துறையினர் மக் கள் மத்தியில் போதிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தாமல் இருப்ப தற்கும் இதுவே காரணம் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டு கின்றனர். (ந.நி)

;