tamilnadu

img

கோவை அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்

 கோவை, மே 25-கோவை அரசு கலை கல்லூரியில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது. கோவை அரசு கலை கல்லூரியில் மொத்தம் 22 பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் மொத்தமாக 1,430இடங்கள் உள்ளன.  இந்நிலையில் சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 80இடங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் வெள்ளியன்று நடத்தப்பட்டு அந்த இடங்கள்நிரப்பப்பட்டன. தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கூட்டம் சனியன்று தொடங்கியது. மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் நடைபெற இருக்கும் மாணவர் சேர்க்கையானது வரும் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தகலந்தாய்வில் சனிக்கிழமை மட்டும் சுமார் 800மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் பி.காம் பாடப்பிரிவையே தேர்ந்தெடுத்தனர். இதனையடுத்து பி.பி.ஏஉள்ளிட்ட வேறு கலைப்பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்தனர். அறிவியல் சார்ந்த பாடங்களான இயற்பியல், வேதியியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே நடைபெற்றது. 410 மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். இதில் 60 சதவீதம் ஆண்கள் 40 சதவீதம் பெண்கள் ஆவர்.கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் கொண்டு வராமல், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழையும் உடன் எடுத்து வர வேண்டுமென்று கல்லூரிநிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.