tamilnadu

img

துப்புரவு பணியாளர்கள் கெளரவிப்பு நிகழ்ச்சி

நீலகிரி, பிப்.25- உதகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கெளர விப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை ரெக்ஸ்  மேல்நிலைப்பள்ளியில் செவ்வா யன்று நடைபெற்ற இவ்விழாவிற்கு  மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். இதில்  நீலகிரி மாவட்ட அனைத்து நகராட்சி,  பேரூராட்சி, ஊராட்சியில் பணியாற் றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. முன்னதாக, இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறுகையில் , வருடம் முழுவ தும் இரவு, பகல் பாராமல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவ லர்கள் தங்களது பணியை தவறாது செய்து வருகின்றனர். அவர்களை கௌரவிக்கும் பொருட்டு இன்றைய  தினம், மாவட்ட நிர்வாகம் சார்பில்  இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு  சிறப்பாக நடத்தப்படுகிறது. நீலகிரி  மாவட்டம் மிகவும் குளிர்ச்சியான  மாவட்டமாகும். அதனையும் பொருட் படுத்தாமல் துப்புரவு பணியில் ஈடுப டும் பணியாளர்கள் தங்கள் பணியினை  தவறாமல் செய்து வருவது மிகவும்  பாராட்டுக்குரியது என்றார்.  மேலும், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்பு ரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே, பணியாளர்கள் அனைவரும் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், அனைத்து பணியாளர்களுக்கும்  ரெட்கிராஸ் மூலமாக மருத்துவ பரிசோ தனை செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரி வித்தார்.

இதனைத்தொடர்ந்து கலை நிகழ்ச் சிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் எஸ்.நிர்மலா, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கெட்சி லீமா அமாலினி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) கீதாப்ரியா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம், இந்திய செஞ்சிலுவை சங்கத் (உதகை) தலைவர் மணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;