கோவை, மே. 18 – புலம்பெயர்ந்தோர் மற்றும் ஆதரவற்றோருக்கு சிஐடியு தொடர்ந்து நிவாரண பணிகளை தொய்வின்றி மேற்கொண்டு வருவது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப் க்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிஐடியு கோவை மாவட்டக் குழு சார்பில் புலம்பெயர்ந்தோர் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு சமைத்து கொடுப்பது மற்றும் நிவாரண பொருட் கள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவை எஸ்எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட சிவானந்த புரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் மற்றும் சிஐடியு கிளைகளின் சார்பில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக புலம்பெயர் ந்தோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோருக்கு உணவு சமைத்து கொடுப்பது, நிவாரண பொருட்களை வழங்குவது போன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று சிவானந்தபுரம் பகுதியில் இவ்வமைப் புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வருவாயின்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகை யில் நிவாரண பொருட்கள் வழங்கப் பட்டது. இதனை, சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் துவக்கி வைத் தார். இந்நிகழ்வில் சிஐடியு மாநகர பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் டி.வி.ரமணி, சிவானந்தபுரம் கிளை ஏ.செல்லக்குட்டி உள்ளிட் டோர் பங்கேற்றனர். கொரோனா காலத்தில் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் எவ்வித எதிர்பார்ப்பு மின்றி சிவானந்தபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், சிஐடியு அமைப்பினரின் முயற்சிக்கு இப்பகுதி மக்கள் ஆதரவளித்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.