tamilnadu

வேளாண் பல்கலை தரவரிசைப் பட்டியல் வெளியீடு தேதி மாற்றம்

கோவை,  அக். 15 - தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் தேதியில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறி வியல் பட்டப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண் ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில், மொத்தம் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதையடுத்து பட்டப்படிப்பிற்கு தகுதியோருக்கான தரவரிசைப் பட்டியல் வியாழனன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தரவரிசைப் பட்டி யல் வெளியிடப்படும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது. அதன்படி, பொது தரவரிசைப் பட்டியல் வரும் அக்.23 ஆம் தேதியும், சிறப்பு தரவரிசைப் பட்டியல் அக்.28 ஆம் தேதி யும் வெளியிடப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக முதல்வர் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.