tamilnadu

img

சேலம் சேகோ சர்வ் நிறுவனத்தின் வர்த்தக சாதனை கேக் வெட்டி கொண்டாட்டம்

சேலம், மார்ச் 13- சேலம் சேகோ சர்வ் நிறுவ னத்தின் வர்த்தகம் நடப்பாண்டில் ரூ.1000 கோடி கடந்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். இதைத் தொழிலாளர்கள் கேக் வெட்டி வெள்ளியன்று கொண்டாடினர். சேலம்-பெங்களூரு சாலை யில் குரங்குசாவடி அருகே செயல் பட்டு வரும் சேகோ சர்வ் நிறுவ னம் கடந்த 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு மரவள் ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவு ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவ னம் மூலம்தான் இந்தியா முழுவ தும் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. தொடக்கத்தில் 40.63 லட் சம் ரூபாய் விற்பனை செய்த இந்த நிறுவனம், கடந்த ஆண்டு அதிக பட்சமாக 504 கோடி ரூபாய் வர்த்த கம் செய்த நிலையில், நடப்பு ஆண்டில் 1000 கோடி ரூபாய்க்கு இலக்கை அடைவதற்கான வியா பாரப் பணியில் சேகோ சர்வ் நிர்வா கம் தீவிர கவனம் செலுத்தி வந் தது. இதன் பலனாக 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான விற் பனை இலக்கை தாண்டி 1001 கோடி ரூபாய் வர்த்தகத்தை சேகோ சர்வ் நிறுவனம் எட்டியுள்ளது. அதற்கான பாராட்டு விழா சேலம் சேகோ சர்வ் நிறுவனத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியின் நிறு வனத்தின் தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. இதில், சேகோ சர்வ் நிறுவனத் தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் மற் றும் சேகோ உற்பத்தியாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.  மேலும், தமிழ்மணிக்கு மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரி வித்தனர். மேலும் 50 கிலோ அள வில் மிகப் பிரம்மாண்டமான கேக் வெட்டியும் உற்சாகமாக கொண் டாடி மகிழ்ந்தனர். இதில் நிர் வாகத்தின் மேலாண்மை இயக்கு னர் என்.சதீஷ், மேலாளர் வி.செண்பகராஜா, ஆர்.ரவிக்கு மார், வியாபாரிகள் சங்க செயலா ளர் வெங்கட்ராமன், உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.