tamilnadu

img

கார்ப்ரேட்டுகளுக்காக சாமானியர்களை வதைக்கும் பட்ஜெட்

கே.தங்கவேல் பேச்சு

திருப்பூர், பிப். 14 - கார்ப்ரேட்டுகள் நலனைப் பாதுகாப்பதற்காக சாமானிய மக்களை வதைக்கக்கூடியதாக மத்திய  அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.தங்கவேல் கூறினார். திருப்பூர் எம்.எஸ்.நகர் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளியன்று இடதுசாரி கட்சிகள் சார்பில்  மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எஸ்.நகர் கிளைச் செயலா ளர் இ.பி.ஜெயகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், உலக  அளவில் நெருக்கடி இருப்பதால் வளர்ச்சி குறை வாக இருக்கிறது. எனவே இந்தியாவிலும் வளர்ச்சி குறைந்திருக்கிறது என்று ஆட்சியாளர்கள் கூறு கின்றனர். உலக அளவில் ஏகாதிபத்திய நாடுகளின் நலனுக்கு ஏற்ற உலகமய, தாராளமய, தனியார் மயக் கொள்கைகளை அமல்படுத்தும் மத்திய பாரதிய ஜனதா அரசு முந்தைய ஆண்டு இந்தியாவின் வளர்ச்சியுடன், தற்போதுள்ள நிலையை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டும். நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் எனச் சொல்லும் பாஜக  அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வரி விதிப்பதற்கு மாறாக, பொது மக்களின் நம்பிக்கையைப் பெற்ற  எல்ஐசி பங்குகளை விற்கப் போவதாகச் சொல்கி றது. இது சாமானிய மக்களுக்கு எதிரான பட்ஜெட் என்று கூறினார். இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளர் பி.ஆர்.நடராஜன், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் பி.முரு கேசன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டலச் செயலா ளர் ஏ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் முருகேஷ் நன்றி கூறி னார். இதேபோல் திருப்பூர் வடக்கு மாநகரம் குமார்  நகர் வ.உ.சி.நகர் பஸ் நிறுத்தம் அருகே வியாழக் கிழமை நடைபெற்ற இடதுசாரி கட்சிகள் பிரச்சாரக் கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் நடராஜ் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், மாநகரக்குழு உறுப்பினர் பி.ஆர்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன், மண்டலச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர். இதில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

;