tamilnadu

img

சென்னை சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து பிஎஸ்என்எல் அனைத்து சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக. 3-  சென்னை டெலிகாம் சொசைட்டியின் நிர்வாகச் சீர்கேடு, முறையற்ற இட விற் பனை ஆகியவற்றை கண்டித்து பிஎஸ்என் எல் அனைத்து சங்க கூட்டமைப்பினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி ஓய்வுபெற்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தொகையினை சீனியா ரிட்டி படி உடனடியாக வழங்க வேண்டும். தணிக்கை செய்யப்பட்ட மூன்று ஆண்டு வரவு செலவு கணக்குகளை உடனடியாக வெளியிட வேண்டும். மூன்று ஆண்டுகளாக தராமல் இருக்கும் ஈவுத்தொகையை உடனே வழங்க வேண்டும். நிலுவை, கடன் பொறுப்பு, சொத்து விபரம் குறித்த சொசைட் டியின் உண்மை நிலையை வெளிப்படை யாக அறிவிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பிஎஸ்என்எல் அனைத்து சங்க கூட் டமைப்பினர் திங்பளன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகம் முன்பு நடை பெற்ற ஆர்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கச் செயலாளர் சி.ராஜேந்திரன், எஸ்என்இஏ குமரகுரு,  ஏஐபிஎஸ்என்எல் இஏ சந்தோஷ், ஏஐபிடிபிஏ  குடியரசு உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலக வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் ஏ.சாகுல் அமீது, ஆர்.பிரபாகரன், பி.தங்க மணி, எஸ்.மனோகரன், ஓய்வூதியர் சங்கத் தின் மாநில பொறுப்பாளர் நிசார் அகமது, அதிகாரிகள் சங்கத்தின் பி.பி.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்என்இஏ நிர்வாகி வி.குருசாமி, பிஎஸ்என்எல் ஊழி யர் சங்க நிர்வாகிகள் கே.விஸ்வநாதன், என்.ராமசாமி, எஸ்.சுப்பிரமணியம், ஏஐபி எஸ்என்எல்இஏ ஜி.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

;