திருப்பூர், பிப். 6 - கண் பார்வையற்ற வாக்காளர்களுக்காக பிரெய்லி முறையிலான வாக்காளர் அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. கண் பார்வையற்ற, கண் பார்வை குறை பாடு உடைய மாற்றுத் திறனாளி வாக்காளர் களுக்கு இந்திய தேர் தல் ஆணையம் ’பிரெய்லி’ முறையிலான வாக்காளர் அடையாள அட்டைகளை வழங் குவதென தீர்மானித்துள்ளது. அதன்படி பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டைகள் திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தடைந்துள்ளன. தற்போது வாக்காளர் அடையாள அட்டையில் அவர்களது பெயர், விவரங்கள், சரியாக உள்ளனவா என்பதை அவர்களே சரிபார்த்துக் கொள்ளும் வகையில் இந்த அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் வடிவமைத்து, மாவட்டந்தோறும் வெளியிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கண் பார்வையற்ற மற்றும் கண்பார்வை குறைபாடு உடைய 905 மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்கட்ட மாக வாக்காளர் அடையாள அட்டைகள் வந்துள் ளன. சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மூலம் திருப் பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களில் உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்க ளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.