tamilnadu

img

ஆயிரம் கலைஞர்களால் இசைக்கப்பட்ட பறையிசை

கோவை, டிச.28- கோவையை அடுத்த நீலாம்பூரில் உள்ள கதிர் கல்லூரி வளாகத்தில் உலக சாதனை முயற்சியாக ஆயிரம் கலைஞர்கள் ஒன்று கூடி ஓரே இடத்தில்  பறை இசைக்கும் நிகழ்வு நடை பெற்றது. கிராமிய புதல்வன் என்ற குழு ஒருங்கிணைப்பில் பேரில் கோவை மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறையிசை குழுக்கள் ஒன்றாக சேர்ந்து பறை வடிவில் வட்டமாக நின்று பறையடித்தனர். பறையிசை கலைஞர் வேலு ஆசான் மற்றும் கிராமிய புதல்வன் கலைக் குழு ஒருங்கி ணைப்பாளர் பகையரசன் ஆகியோர் வழிகாட்டுதலில் இந்த சாதனை முயற்சியானது நடைபெற்றது. இதில் 5 வயது சிறுமி முதல் 50  வயது மூத்தோர் வரையிலானோர்  இந்த பறையிசை சாதனை முயற்சியில் பங்கெடுத்துப் பறை  இசைத்து தங்கள் திறமைகளை  வெளிப்படுத்தினர். இந்த சாதனை யானது கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், லிம்கா புக் ரெக்கார்ட்ஸ் போன்ற சாதனைகளை பதிவு செய்யும்  அமைப்பின் மூலம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள்கள் வழங்கப்பட்டது.

;