tamilnadu

img

பாரதியார் பல்கலை. உறுப்பு கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

பொள்ளாச்சி, ஏப். 22- பொள்ளாச்சி பாரதியார் பல்கலைக்கழக அரசுஉறுப்பு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்களன்று விநியோகிக்கப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழக அரசு உறுப்பு கல்லூரியில் பி.காம்(சிஏ),(வணிகவியல்), பி.காம்(பி,ஏ), பி.பி.ஏ, பிஎஸ்சி(கணிதம்) மற்றும் பிஏ (ஆங்கில இலக்கியம்) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் 2019-20 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம் திங்களன்றுதொடங்கிய முதல் நாளில் 475 விண்ணப்பங்கள் வரைவிநியோகம் செய்யப்பட்டது. அன்றே பூர்த்தி செய்யப்பட்ட 250 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.மேலும், விநியோகம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மே 6 ஆம் தேதி சமர்ப்பிக்ககடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 10 ஆம்தேதியன்று காலை 11 மணி அளவில் இக்கல்லூரியின் தரவரிசைப்பட்டியல்  வெளியிடப்படும். இதனைத்தொடர்ந்து மே 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும் எனவும், ஜுன் மாதம் 20 ஆம் தேதி கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என கல்லூரி முதல்வர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

;