பொள்ளாச்சி, டிச.31- பொள்ளாச்சி சந்தையில் வாழைத்தார் ஏலத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் விலை கூடுதலாக ஏலம் போனது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரத்தில் ஞாயிறு மற்றும் புதனன்று வாழைத்தார் ஏலம் நடைபெறுகிறது.இங்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், தூத்துக்குடி, திருச்சி, கரூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியிலிருந்தும் கொண்டு வரப்படும் அனைத்து வகையான வாழைத் தார்களும் ஏலம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது. கடந்த வாரம் வரை மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தது. கடந்த இரண்டு வாரமாக முகூர்த்த நாட்கள் இல்லாததால்,வாழைத்தார் விற்பனை மந்த மாக இருந்ததுடன், குறைவான விலைக்கு ஏலம் போனது. இந்நிலையில் ஞாயிறன்று நடைபெற்ற ஏலத்தில் பனிபொழின் காரண மாக வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது. இதனையடுத்து கேரள வியா பாரிகள் அதிகம் வந்ததால் அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு ஏலம் விடப்பட்டது. கடந்த வாரம் ஒரு செவ்வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.900க்கு மட்டுமே ஏலம் போனது. இந்நிலையில், ஞாயிறன்று ரூ. 1,350 வரை ஏலம் போனது. அதுபோல், பூவன் ரூ.650க்கும், மோரீஸ் ரூ.800க்கும், கற்பூரவள்ளி ரூ.750க்கும், ரஸ்தாளி ரூ.650க்கும் ஏலம் போனதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.