tamilnadu

img

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

சேலம், செப்.4- ஓமலூரில் மழைநீர் சேகரிப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் தூய்மை பேணுதல் குறித்து தனியார் பள்ளி மற்றும் ஓமலூர் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும்  விழிப்புணர்வு பேரணி புதனன்று நடை பெற்றது. சேலம் மாவட்டம், அரசு பொறியியல் கல்லூரி அருகில் மழைநீர் சேமிப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் தூய்மை பேணுதல் குறித்த விழிப்புணர்வு பேரணி தனியார் பள்ளி சார்பில் நடைபெற்றது. இதில் ஓமலூர் அருகேயுள்ள விவே கானந்தா கேந்திரிய வித்யாலய மெட்ரிக் குலேசன் பள்ளி மற்றும் ஓமலூர் ரோட்டரி கிளப் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இந்த பேரணியில்  3ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், மழைநீர் சேகரிப்பின் அவசியம், குடிநீர் சிக்கனம், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு மற்றும் தங்களை சுற்றியுள்ள பகுதி களை தூய்மையாக வைத்து கொள்ளுதல் போன்ற விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.  மேலும் மழை நீரை சேமிப்போம். தண்ணீர் பிரச்சனையை தீர்ப்போம். மழை  நீர் சேமிப்பு கட்டமைப்புகளை புனரமைப் போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப் புணர்வு முழக்கங்களையும் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியபடி சேலம் அரசு பொறியியல் கல்லூரி எதிரிலிருந்து பள்ளி  வளாகம் வரை விழிப்புணர்வு பேரணி சென்றன. இந்நிகழ்சியில் 300க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இப்பேரணியில் வழிநெடுகிலும் விழிப் புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தினர். இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி  முதல்வர் சுமதிசிவக்குமார் மற்றும் ஓமலூர் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.

;