tamilnadu

img

நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகை,ஜன.31- நீலகிரி மாவட்டம், சோலூர் மட்டம் அரசு உயர்நிலை பள்ளி யில் செறிவூட்டப்பட்ட உணவுகள்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரியில், தமிழ்நாடு நுகர் வோர் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு பாண்டிசேரி நுகர்வோர் அமைப் புகள் கூட்டமைப்பு நிலகிரி மாவட் டம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர்  மன்றம், கூடலூர் நுகர்வோர் பாது காப்பு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து செறிவூட்டப்பட்ட உணவுகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை வியாழனன்று சோலூர்மட்டம் அரசு உயர்நிலை பள்ளியில் நடத்தின. இந் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரி யர் சோமசுந்தரம் தலைமை தாங்கி னார்.

இதில் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் திரு நாவுக்கரசு பேசுகையில்,  உணவுகள் பெரும்பாலும் பாது காப்பற்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது.  உணவு பாது காப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பல்வேறு நடவடிக்கை  எடுத்து வந்தாலும், கலப்படம், காலாவதி உணவுகள் சந்தையில் அதிகரித்து வருவது தடுக்க இய லாத நிலையே தொடர்கிறது.   எனவே மக்களும், குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்களும் உணவு பொருட்களில் காலாவதி உணவுகள், தரமற்ற உணவுகள், உரிய தகவல் இல்லாத பொருட் களை விற்பனை செய்வது குறித்து உணவுத்துறை வாட்சப் எண் 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும். உணவு பயன்பாட்டிற்கு இல் லாத உணவுகள் குறிப்பாக பதப்ப டுத்துதலுக்கான உப்பு, விளக்கிற் கான எண்ணெய், இயற்கை உண வுகள் என்று பொய்யான விளம்ப ரங்கள் மூலம் தரமற்ற உணவு களை விற்பனை செய்து வருகி றார்கள். மத்திய அரசு ஊட்டச்சத்து எல் லோருக்கும் கிடைக்கும் வகையில்  செறிவூட்டப்பட்ட உணவுகளை விற்பனை செய்ய வலியுறுத்தி வருகிறது.

தற்போது இரும்பு சத்து, வைட்டமின் சி, அயோடின், போன்ற சத்துக்களை மக்கள் அதி கம் பயன்படுத்தவும், எண்ணெய், உப்பு, வனஸ்பதி போன்றவற்றில் சேர்த்து கொடுக்க சொல்கிறது.  எனவே உணவுகள் வாங்கும் போது தரமான பொருட்களை அறிந்து வாங்க வேண்டும். மேலும்  பாக்கெட் பொருட்கள் வாங்கும் போது தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி,  ஊட்ட சத்து விவரங்களை அறிந்து  வாங்க வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து தமிழ் நாடு நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு மாவட்ட செயலா ளர் பசவராஜ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் உணவு பாதுகாப்பு குறித்து பேசி னார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என  ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

;