tamilnadu

அவிநாசி முக்கிய செய்திகள்

பனியன் தொழிலாளியை கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

அவிநாசி, அக்.10- அவிநாசி அருகே பனியன் தொழிலா ளியை கத்தியால் குத்தி விட்டு, அவரிடம் இருந்து ரொக்கப்பணம், செல்பேசி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற இரு வரை காவல்துறையினர் கைது செய்தனர்.  பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கெளரி சங்கரபஸ்வான்(28). இவர் தெக்கலூரில் தங்கி ஒரு பனியன் நிறுவனத்தில் பணி யாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தெக்கலூர் வடுகபாளையம் பிரிவு அருகே புதன்கிழமை நடந்து சென்று கொண்டி ருந்துள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். இதன்பின் அவரை கத்தியால் குத்தி விட்டு, செல்பேசி, ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.  இவரின் அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த பொதுமக் கள் இவரை மீட்டு அவிநாசி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக் கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதற்கிடையில்  வியாழக்கிழமை மாலை தெக்கலூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை காவல்துறையினர் பிடித்து தீவிர விசா ரணை மேற்கொண்டனர். இதில் இவர்கள், ராமநாதபுரம் கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த  கருப்பையா மகன் நிமல்ராஜ்(22), பெங்களூரு கோமேசுவரா நகரைச் சேர்ந்த ராகவேந்திரன் மகன் சரண்குமார்(21) என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் கெளரிசங்கரபஸ்வானிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவிநாசி காவல் துறையினர் நிமல்ராஜ், சரண்குமார் ஆகி யோரை கைது செய்தனர்.

அவிநாசியில் ரூ.13.66 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அவிநாசி, அக்.10- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.13.66 லட்சத்திற்கு வர்த்தகமானது.  ஏ.சி.எம்.எஸ் ஏல மைத்தியத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு 873 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.  இதில் குவிண்டால் ஒன்றுக்கு ஆர்.சி.எச். ரகப்பருத்தி ரூ.4500 முதல் ரூ.5600 வரையிலும், மட்ட ரகப்பருத்தி ரூ.2000  முதல் ரூ.3000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம்  ரூ.13.66 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.   முன்னதாக, இந்த ஏலத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், போச்சம்பள்ளி, பல்லடம், புளியம்பட்டி, பொங்கலூர், குன் னத்தூர், செங்கப்பள்ளி, சேலம், ஆத்தூர், மேட்டூர், தருமபுரி, பொம்மிடிப்பூண்டி, அந்தியூர், குண்டடம் ஆகிய பகுதி களிலிருந்து 156 விவசாயிகளும், அவிநாசி, திருப்பூர், பல்லடம், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து  22 பருத்தி வியாபாரிகளும்  பங்கேற்றனர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

அவிநாசி, அக்.10- அவிநாசி அருகே துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நான்கரை சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவிநாசி அருகேயுள்ள ரங்காநகரைச் சேர்ந்த வையா புரி என்பவரின் மகன் ஷாஜு(33). இவர், புதன்கிழமை இரவு தனது மனைவி, மகனுடன் அவிநாசியில் இருந்து ரங்கா நகர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தார்.  ரங்காநகர் பாறைக்குழி அருகே வந்த போது, இவர்க ளுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம  நபர்கள், தம்பதியரை வழிமறித்து துப்பாக்கியை  காட்டி மிரட்டியுள்ளனர். இதன்பின் ஷாஜுவின் மனைவி அணிந்தி ருந்த நான்கரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

சேவூர் அருகே பெண்ணிடம்  5 சவரன் நகை பறிப்பு

அவிநாசி, அக்.10- சேவூர் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள் வேமாண் டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகதீஷ்வரன்(58). இவரது மனைவி கிருஜா (53). இவர்கள் இருவரும் நம்பி யூரில் இருந்து சேவூர் குட்டகம் வழியாக இருசக்கர வாக னத்தில் புளியம்பட்டி நோக்கி புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனர். சேவூர், கொட்டைக்காட்டுப்பாளையம் அருகில் வரும்போது, இவர்களுக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் திடீரென கிருஜா அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து சேவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

அவிநாசி, அக்.10- அவிநாசி அருகே கரு ணைபாளையத்தில் வட மாநில இளம் பெண் தூக் கிட்டுத் தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் தொடர் பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத் தைச் சேர்ந்த மகேஷ் பிரசாத் என்பவரின் மகள் பார்டி குமாரி(19). இவர் அவிநாசி  மங்கலம் சாலையில் உள்ள  தனியார் பனியன் நிறுவ னத்தில் தங்கி பணியாற்றி  வந்துள்ளார். இந்நிலையில், இவர் தங்கியிருந்த விடுதி அறையில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த அவிநாசி காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பேரிடர் மேலாண்மை குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி

அவிநாசி, அக்.10- பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி தெக்கலூர் தனியார் பனியன் நிறுவனத்தில் நடைபெற்றது. இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட வர்களை எவ்வாறு மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிப்பது, வீடு மற்றும் நிறுவனங் களில் எரிவாயு கசிவு ஏற்படும் போது செய்ய வேண்டிய விபத்து தடுப்பு முறைகள், தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது, தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயணைப்புத் துறையின ரின் முக்கிய செயல்பாடுகள், தீ விபத்தின் போது துரிதமாக தீயை அணைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீ தடுப்பு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது, பதட்டமின்றி சரியான முறையில் செயல்படுதல் உள் ளிட்டவை குறித்த செயல்முறை விளக் கப் பயிற்சி தெக்கலூரில் தனியார் பனி யன் நிறுவனத்தில் வியாழக்கிழமை நடை பெற்றது. இம்முகாமை நிலைய அலுவலர் பால சுப்பிரமணியம், தீயணைப்பு வீரர்கள்  ஒருங்கிணைத்தனர். மேலும் விபத்தில்லா  தீபாவளியாக கொண்டாடும் வகையில்,  பெரியோர்கள் பார்வையில் குழந்தைகள்  பட்டாசு வெடிக்க வேண்டும். ஒரு பக்கெட் தண்ணீர் வைத்துக்கொண்டு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இம்முகாமில், பனியன் நிறுவனத் தொழிலா ளர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய ராணுவத்தில் சேர்க்கை எழுத்து தேர்வு தேதி மாற்றம்

திருப்பூர், அக்.10- இந்திய ராணுவத்தில் சேருவதற்கான திரளணி  ஈரோடு மாவட்டத்தில் உள்ள வ.உ.சி மைதானத்தில் 22-08-2019 முதல் 02-09-2019 வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்கான திரளணியில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக் கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை மாவட் டங்களை சார்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட னர். இந்திய ராணுவத்தில் சேருவதற்கான திரள ணியில் Soldier (Technical),Soldier (Technical Avia tion & Ammunition Examiner), Soldier (Nursing Assistant), Soldier(General Duty), Soldier (Clerk / Store Keeper Technical) and Soldier (Trade sman)  ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கான எழுத்துத் தேர்வு 27-10-2019 நடை பெற உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இத்தேர்வு நாள் 26-10-2019  (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.  மேலும், இத்தேர்வு பற்றிய விப ரங்களை அறிய 0422-2222022 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  எனவே, திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன் னாள் படைவீரர்களின் சிறார்கள் மற்றும் இளை ஞர்கள் 26-10-2019 (சனிக்கிழமை) அன்று நடை பெறும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

;