tamilnadu

img

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் தப்பியோட்டம்

கோவை, பிப். 13 -  கோவை மத்திய சிறையில் இருந்து அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மத்திய சிறைச்சாலையில் 1800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த சிறைச்சாலையில் அவ சர சிகிச்சைக்காக சிறை மருத்துவ பிரிவு  உள்ளது. அதேசமயத்தில் சிறைவாசிக ளுக்கு மேல் சிகிச்சைகள் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக கோவை அரசு  மருத்துவமனைக்கு அழைத்து வர வசதி கள் செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படும் சிறைவாசிகளுக்கு சிகிச்சைகள் அளிக்க வாரந்தோறும் சனிக்கி ழமை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.  இந்நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம்(31) என்ற விசாரணைக் கைதியை புதனன்று இரவு கோவை மத்திய சிறையில் இருந்து  சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவம னைக்கு  அழைத்து வந் தனர்.  இந்நிலை யில் வியாழ னன்று அதி காலை சுப்பி ரமணியம் மருத்துவம னையில் இருந்து திடீ ரென தப்பி யோட முற் பட்டார். இதைத்தொடர்ந்து போலீசாரும், மருத்து வமனையின் தனியார் காவலர்களும்  சுப்பிரமணியத்தை பிடிக்க முற்பட்டனர். ஆனால், அவர் யார் பிடியிலும் சிக்காமல் தப்பினார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்பத்தி யுள்ளது. இதையடுத்து, பந்தய சாலை சாலை  போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணைக் கைதியை தேடி வருகின்றனர்.