கோவை, நவ. 3- கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக உமா ஐபிஎஸ் நியமனம் செய் யப்பட்டுள்ளார். கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்து வந்த சுஜித் குமார் ஐபிஎஸ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப் பேற்றதையடுத்து, மாநகர போக்குவரத்து காவல் துறையை குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் ஐபிஎஸ் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த உமா ஐபிஎஸ் கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக நியமித்து கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட் டுள்ளார்.