tamilnadu

img

உடுமலைப்பேட்டை வட்டம் புக்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள்

திருப்பூர், ஆக. 18- உடுமலை வட்டம், புக்குளத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.25.92 கோடி மதிப்பில் 320 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணியினை  கால்நடை  பராமரிப்புத் துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ் ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள வீடற்ற மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, சுகாதாரமற்ற சூழ்நிலையில் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இதில் சுமார் 320 குடும்பங்களை மறு குடியமர்வு செய்ய அனைவருக்கும் வீடுகள் திட்டத் தின் கீழ் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், புக்குளம் திட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. 2.62 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.25.92 கோடி மதிப்பில் தரைதளம் மற்றும் 3 அடுக்கு மேம்பாட்டில் 320 குடியிருப் புகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், இக்குடியிருப்பில் கட்டட பரப்பளவு 401.24 சதுர அடியாகும். ஓவ்வொரு குடி யிருப்பிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, பால்கனி, குளியல் அறை மற்றும் கழிவறை அமைக்கப்படவுள்ளது.  மேலும் இத்திட்ட பகுதியில் தார் சாலை, மழைநீர் வடிகால், கழிவு நீரகற்று வசதி, குடிநீர் தொட்டி, பூங்கா, கடைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, குப்பை சேகரிப்புத் தொட்டி மற்றும் தெரு மின் விளக்குகள் போன்ற அனைத்து  வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் சிறப்பான முறையில் கட்டப்பட்டு வருகின்றன. விரைவில் கட்டு மானப் பணிகள் முடிவுற்று திறக்கப்பட உள்ளது. அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் குமார், குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.ரொனால்டு ஷெல்டன் பெர்னான்டஸ்,  உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் தயானந்தன், கால் நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் மரு.ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.