சாலை பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
தருமபுரி, நவ. 30- பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டுமென சாலை பணியாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தில் சனியன்று மாவட்ட தலைவர் கோ.முனிராஜு தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ரங்கசாமி, மாநில துணைத்தலைவர் கே.தங்கராஜி, மாவட்ட செயலாளர் மா.ரமேஷ் மாவட்டப் பொருளாளர் எச்.ஆர்.சித்தார்த்தன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி.பழனியம்மாள், வட்டத்தலைவர் எம்.சுருளி நாதன், மாவட்டப் பொருளாளர் கே.புகழேந்தி,மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் பி.எஸ்.இளவேனில், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இப்பேரவையில் மாவட்டத் தலைவராக மா.ரமேஷ், மாவட்டச் செயலாளராக சி.சந்திரசேகரன், பொருளாளராக எச்.ஆர்.சித்தார்த்தன், துணைத் தலைவர்களாக பெ.முனு சாமி, செ.பாலாஜி, டி.கணேஷ்குமார், இரா.சுமதி, இணை செயலாளர்களாக சி.ரதி, ஜி.மகேஷ்வரி, ஜி.குணசேகரன், எம்.ஸ்ரீதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நாமக்கல்
திருச்செங்கோட்டில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க வட்ட கிளையின் 7ஆவது பேரவை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறி விக்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித்திறன் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து வட்ட கிளையின் புதிய தலைவ ராக கே.சம்பத், செயலாளராக கே.பாஸ்கர், பொருளாள ராக பன்னீர்செல்வம், துணை தலைவர்களாக ஜீ.இராம லிங்கம், எஸ்.சுப்பிரமணியம், துணைச் செயலாளராக பி. தமிழ்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.