அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன முழக்கம்
கோவை, நவ. 28 – அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தி பணிச்சுமை ஏற்படுத்தும் நட வடிக்கையை கைவிட வலியுறுத்தி கோவை யில் அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர்களின் ஊதி யத்தில் இருந்து அங்கன்வாடி மையத்திற்கு வாடகை கட்டச்சொல்வதை கைவிட வேண் டும். மைய கைபேசியின் மூலம் பணிகளை முழுமையாக கற்றுக்கொள்ளும் வரை வேலை பழுவை திணிக்காதே. மையங்கள் நடத்த ஆகும் செலவை மாதா மாதம் நிலுவை யில்லாமல் வழங்கிட வேண்டும். அங்கன் வாடி ஊழியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.சாந்தி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி போராட் டத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற் றினார். கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் மாநில பொருளாளர் பாக்கியம், செயலாளர் ஸ்டெல்லா ஆகியோர் உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டததில் நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.