tamilnadu

img

மருத்துவ சான்றிதழ் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு- முற்றுகை

தருமபுரி, மார்ச் 17- மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்காமல் அலைக் கழிக்கப்படுவதால் செவ்வாயன்று தருமபுரி மாற்றுத்திறனாளிகள்  அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.   மாற்றுத்திறனாளிகள் அரசின்  சலுகைகள் பெறுவதற்கு ஊனத்தின் தன்மை குறித்து மருத்துவசான்று பெறவேண்டும். அதன்பின்தான் தேசிய அடையாள அட்டையை அரசு வழங்கும். தேசிய அடையாள அட்டை மூலமாக தான் மாற்றுத்திறனாளி களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, பேருந்து சலுகை, உதவித்தொகை, மாற்றுத்திறனாளி களுக்கான வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலச்சலுகைகள் பெற முடியும்.  மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு ஏதுவாக தருமபுரி மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலகத்தில் மாதத்தின் முதல் திங்கள் மற்றும் 3ஆவது திங்களன்று முகாம் நடைபெறுகிறது. அதேபோல் தருமபுரி அரசு மருத் துவமனையில் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 

ஆனால் மாற்றுத்திறனாளி அலு வலகத்தில் நடைபெறும் முகாமிற்கு மருத்துவர்கள் சரிவர வருவதில்லை. குறிப்பாக, நரம்பியல் மருத்துவர்கள வருவதில்லை. இங்கு வராததால் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சான்றிதழ் பெற மாற்றுத்திறனாளிகள் செல்கின்றனர். அங்கு நரம்பியல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி யிடம், நீங்கள் ஆர்த்தோ டாக்டரை பாருங்கள் என்றும், ஆர்த்தோ மருத்துவரை பார்க்க சென்றால் சைக் கார்டிக் பாருங்கள் என மருத்துவர்கள் அலைக்கழித்துவருகின்றனர். குறிப்பாக, தருமபுரி மாந்தோப்புப் பகுதியைச் சேர்ந்த நரம்பு பாதிப்பு ஏற்பட்ட மாதையன், அரூர் வட்டம்  கிரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், பென்னாகரம் வட்டம கூத்தப்பாடி கிராமத்தைச் சேரர்ந்த மாதம்மாள்,கரூராள், பொம்பட்டி யைச் சேர்ந்த முருகன், பழனியம் மாள்  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை கடந்த 4 மாதங்களாக அலைக்கழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட இவர்க ளால் நடக்க முடியாது. 

இவர்களை காரிலோ, ஆட்டோ விலோ தான் அழைத்து வரவேண் டும். அப்படி அழைத்து வருவதால் பெரும் செலவு ஏற்படுவதாக மாற்றுத் திறனாளிகளின் உறவினர்கள் தெரி விக்கின்றனர். இந்நிலையில் செவ்வா யன்று தருமபுரி மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு வந்த மாற்றுத்திற னாளிகள் மருந்துவ சான்றிதழ் கிடைக் கும் வரை அலுவலகத்தை விட்டு செல்லமாட்டோம் என கூறி தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தலைமை யில் முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர். மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வருகின்ற மார்ச் 23ஆம் தேதி யன்று நடைபெறும் முகாமில் சான்றி தழ் கிடைக்க நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்தார். இதைய டுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இப்போராட்டத்தில்  மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் கே.ஜி.கரூரான், மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, நிர்வாகிகள் மாரியப்பன். இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;