tamilnadu

img

மோடி அரசிற்கு எதிரான முழக்கத்துடன் பிறந்தது புத்தாண்டு

கோவை, ஜன. 1 – ஒன்று பட்ட மக்களை மத ரீதி யாக பிரிக்கும் குடியுரிமை சட்ட திருத்தைக் கொண்டு வந்த மோடி அரசிற்கு எதிரான முழக்கத்தோடு கோவையில் 2020 புத்தாண்டு பிறந்தது. குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்தே ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. மேலும்,  வரலாறு காணாத அளவுக்கு  வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை  என மக்கள் விரோத நடவடிக்கை களிலேயே இந்த அரசின் நடவ டிக்கைகள் அமைந்துள்ளன. ஒட்டுமொத்த மக்களும் இவ்வர சுக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்கிற சூழ்ச்சியுடன் முத்தலாக் சட்டம், காஷ்மீர் மாநில அந்தஸ்த்து ரத்து, குடியுரிமை சட்ட திருத்தம் என தொடர்ந்து மக்களின் கவனத்தை திசை  திருப்பும் நடவடிக்கையை மோடி,  அமித்சா அரசு தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால் பிளவுவாத நடவடிக்கைகள் ஒருபோதும் இந்தியாவில் எடுபடாது என்கிற அழுத்தமான செய்தியை இந்திய மக்கள் தங்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் வெளிப் படுத்தி வருகின்றனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வதே இதற்கு சாட்சியாக உள்ளது. இதன்ஒருபகுதியாக 2019  ஆம் ஆண்டை வழியனுப்பவும், 2020 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாகவும் கோவை உக்கடம் வின்சென்ட் சாலையில் இரவு  11.30 மணிக்கு ஆயிரக்கணக்கா னோர் கூடினர். இதில் சாதி, மத வேறுபாடில்லாமல் பெண்கள், குழந்தைகள் என பலர் தங்களின்  கைகளில் மெழுகுவர்த்தியையும், தேசிய கொடியையும் ஏந்தி டவுன் ஹால் சாலை வரை பேரணியாக சென்றனர். இதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.  இதைத்தொடர்ந்து இரவு  12 மணிக்கு  நாளைய விடியல் பாசிசத்திற்கு முடிவு கட்டும் விடிய லாகவும், மக்கள் ஒற்றுமையை மேலும் வலுவாக்கும் புத்தாண் டாக அமையட்டும் என்கிற ஆவேச முழக்கத்தோடு புத் தாண்டை வரவேற்றனர். 2019 டிச.31 ஆம் தேதி இரவு 11.30 மணியில் இருந்து 2020 ஜன. 1 ஆம் தேதி இரவு12.15 மணி வரை பாஜக தலைமையிலான மோடி அரசிற்கு எதிரான முழக் கத்தோடு புத்தாண்டு பிறந் தது.

;