tamilnadu

img

திருப்பூர் க.நா.சங்கரனுக்கு அஞ்சலி

திருப்பூர், ஜன.27- திருப்பூர் அண்ணா காலனியில் வசித்து வந்த பகுத்தறிவு சிந்த னையாளர், தீவிர புத்தக ஆர்வலர் க.நா. சங்கரன் (94) கடந்த 24ஆம் தேதி காலமா னார். 1926ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள்  பிறந்த சங்கரன் பத் தாம் வகுப்பு வரை படித்தவர். இவருக்குத் திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். திருப்பூர் தனலட்சுமி மில்லில் ஸ்பின்னிங் கிளர்க் ஆக 41  ஆண்டுகள் வேலை செய்தார். இவர் தேசிய வாலிபர் சங்கம் என்ற அமைப்பின் மூலம் 1947ஆம் ஆண்டு திருப்பூரில் சமபந்தி போஜனம் நடத்தினார். அறிவு  நூல் நிலையம், மாணவர் படிப்பகம், சங்கரன் நூலகம் என புத்தக வாசிப்புக்காக 40 ஆண்டுகளுக்கு மேலாக நூலகங்களை நடத்தி வந்தார். பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளில் ஈடுபாடு கொண்ட சங்கரன் ஆலைத் தொழிலாளியின் கல்விச் சிந்தனைகள் என்ற நூலை எழுதியுள்ளார். நம்ம திருப்பூர் நம்ம தீக்கதிர் சிறப்பிதழ் நடத்தப்பட்ட போது இவரது பேட்டி வெளியிடப்பட்டது குறிப்பிட தக்கது. கடந்த சனியன்று அன்னாரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் உள்பட பல்வேறு தரப்பினர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

;