tamilnadu

வனவிலங்குகளின் தொடர் பலி மாவட்ட ஆட்சியர் தலையிட கோவை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 27- கோவை மாவட்டத்தில் வன விலங்குக ளின் உயிர்பலி தொடர்கதையாகி வருவ தால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம் வலியு றுத்தியுள்ளது.

இதுகுறித்து கோயம்புத்தூர் பத்தி ரிக்கையாளர் மன்றம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, கோவையில் புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரி ழந்து வருகின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சேத்துமடை அருகே, கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு இளம் புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. அந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப் பட்டிருந்தாலும், உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது

. மேலும், ஏப்ரல் மாதத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் 6 வயது யானையும், காரமடை வனச்சரகத்தில் ஓர் யானையும் உயிரிழந்தன.  

மே மாதம் சிறுமுகை வனச்சரகத்தில் ஓர் பெண் யானை உயிரிழந்தது. மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு, பெரியநாயக் கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனைக்கட்டி, ஜம்புகண்டி அருகே வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த  ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. அதைத்தொடர்ந்து சிறுமுகை வனச்சரகத்தில் ஓர் பெண் யானை உயிரிழந்துள்ளது.

இவ்வாறு, கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 10 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

 மேலும், கோவையில் மின்வேலி, அவுட் டுக்காய், ரயில்வே பாதை, யானை வழித்த டம் ஆக்கிரமிப்பு என்று யானைகளுக்கு ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் சரி செய்தால்தான் யானைகள் உயிரிழப்பை தடுக்க முடியும். எனவே, மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்ம னுவில் கூறப்பட்டுள்ளது.