tamilnadu

img

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வு நடத்தாத தனியார் பள்ளி- கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

 கோவை, ஜூன் 11- கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ‘நைஸ் அகாடமி’ என்ற பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்த வில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து கல்வித்துறை அதிகா ரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பத் தாம் வகுப்பு மாணவர்கள் அனை வரும் தேர்ச்சி பெற்றதாக அறி விக்கப்பட்டுள்ளனர். மாணவர்க ளுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண் டில் அந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படை யில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதி வேட்டின் அடிப்படையில் 20 சத வீத மதிப்பெண்களும் வழங்கப் படும் என தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், கோவை போத் தனூர் ரயில்நிலையம் அருகே செயல்பட்டு வரும் நைஸ் அகாடமி என்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு கள் நடத்தவில்லை என கூறப்ப டுகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் சுமார் 30க்கும் மேற் பட்ட மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து பல தேர் வுகள் நடத்தப்பட்டதாகவும், இத னால் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு நடத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த புகாரைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியின் முதல்வ ரிடம் தொடர்பு கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு கள் நடத்திய விவரங்கள் குறித்த ஆவணங்களை உடனடியாக கொண்டு வர வேண்டும் என அறி வுறுத்தியுள்ளனர்.  தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் காலாண்டு, அரை யாண்டு தேர்வுகள் பள்ளிகளின் மூலம் பொதுத்தேர்வுக்களாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தவில்லை என்ற பெற்றோ ரின் குற்றச்சாட்டு கல்வித்துறை அதிகாரிகளிடம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாண வர்களின் பெற்றோர் கூறுகை யில், “பள்ளியில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்த வில்லை. இது தொடர்பாக ஏன் என கேள்வி எழுப்பிய போது, தேர் வுக்கான பாடங்களை முடிக்க வில்லை என தெரிவித்தனர். மேலும், மாணவர்கள் முழு ஆண்டு தேர்வுக்கு தயாராகும் வகையில் பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தியுள்ளோம் என தெரிவித்த னர். இந்நிலையில், அரசு தற் போது காலாண்டு மற்றும் அரை யாண்டு தேர்வின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு மதிப் பெண் அளிப்பதாக தெரிவித்துள் ளது. ஆனால் இப்பள்ளியில், தேர்வுகளே நடத்தவில்லை.

எந்த அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என் பதை அதிகாரிகள் விளக்க வேண்டும்” என்றனர். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா கூறுகையில், “காலாண்டு, அரை யாண்டு தேர்வுகள் பள்ளியில் நடத்தாமல் இருக்க வாய்ப்பு இல்லை. சம்மந்தப்பட்ட பள்ளிக்கு தேர்வு நடத்தத் தேவையான வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. இருப்பினும், தற்போது வந்துள்ள புகார் தொடர்பாக பள்ளி நிர் வாகத்திடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்” என்றார்.

;