tamilnadu

உணவு தரச்சான்றிதல் பெறாத 60 டாஸ்மாக் மதுக்கூடங்கள்

ஆய்வுக்கு செல்லாத உணவு பாதுகாப்புத்துறையினர்

கோவை, ஜன. 29 –  கோவையில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் 60  டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாகவும், அதை அதி காரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உணவு பொருட் களை கையாளும் நிறுவனங்கள் உரிமம், பதிவு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனை பெரிய அளவிலான உணவ கம் முதல் தள்ளுவண்டிகள் கடை வரை பெற வேண்டும். இதேபோல், அரசு நிறுவனங்களான டாஸ்மாக் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகள் உள்ளிட்டவையும் கட்டா யம் உரிமம் பெற வேண்டும். இதனடிப்படையில் டாஸ்மாக் மதுக்கூடங்களுக்கு ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்கப் படும். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்படும் 158 டாஸ்மாக் மதுக்கூடங்களில் 60க்கும் மேற்பட்ட மதுக்கூடங்கள் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், டாஸ் மாக் மதுக்கூடங்களில் சுண்டல், கிழங்கு வகைகள், நிலக்கடலை, சில்லி சிக்கன், மீன், ஆம்லெட் உள் ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவை சுகாதாரமற்ற முறையில் இருப்ப தாக நாள்தோறும் மது அருந்துபவர்கள் தகராறு செய்கின்றனர். அன்றாடம் பல்வேறு இடங்களில் ஆய் வுக்கு செல்லும் உணவுத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் கடை களுக்கு மட்டும் வருவதில்லை. இதற்கும்,  கோவை மாவட்ட வடக்கு மேலாளருக்கு உட்பட்ட பகுதியில் செயல்ப டும் 158 டாஸ்மாக் கடைகளில் 64 மதுக்கூடங்கள் உணவு பாதுகாப்பு உரிமத்தை கடந்த 3 மாதங்களாக புதுப்பிக் காமல் செயல்பட்டு வருகிறது என குற்றம்சாட்டினர்.  இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் கூறுகையில், “டாஸ்மாக் கடைகள் டெண்டர் எடுத்தவர்கள் முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்தவர்களின் தகவல்களை அளிக்கவும், பதிவு செய்தவர்களின் விவரங் களை அளிக்கவும் டாஸ்மாக் நிர்வாகத்தினரிடம் பேசியுள் ளோம். இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு புதுப் பிக்காமல் உள்ளவர்கள் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப் படும். பார்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்க ளின் தரம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படும்” என்றார்.

;