tamilnadu

img

31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம்

கோபி, ஜன.24- 31 ஆவது சாலைப் பாதுகாப்பு வார  விழாவையொட்டி வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தின் சார்பில் வியாழ னன்று சாலை பாதுகாப்பு குறித்த கருத்த ரங்கம் நடைபெற்றது.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத் தில் செயல்படும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாது காப்பு குறித்த கருத்தரங்கம்  நடை பெற்றது. இக்கருத்தரங்கில் தமிழக பள்ளிக்  கல்வித்துறை அமைச்சசர் கே.ஏ.செங் கோட்டையன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சாலை பாதுகாப்பு வாரவிழா என்பது சாலைகளில் விபத்துக்கள் குறைப்பதற்காகவும், மக்க ளின் பாதுகாப்பிற்காவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வருகி றது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழக மானது விபத்துக்கள் குறைந்த மாநிலமாக மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது. இந்நிலையில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க நான்கு வழிச்சாலை, ஆறு வழிச் சாலை என தமிழகம் முழுவதும் சாலை களை விரிவுபடுத்து பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சசர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

;