tamilnadu

img

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 220 கிலோ பறிமுதல்

கோவை, ஜன. 9 –  கோவையில் தடைசெய்யப்பட்ட 220 கிலோ  புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழனன்று  மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணை யர் உத்தரவின் பேரில், கோவை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 220 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செ ய்தனர். கோவையில் தனிப்படை காவல் துறையினரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிஙளும்  இணைந்து டவுன்ஹால் பகுதியில்  ராஜவீதி மற்றும் இடையர் வீதி பகுதிகளில்  ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராஜ வீதியில் பேராராம், நாகராம் ஆகியோருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் சுமார் 117 கிலோ  தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட் களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டறி யப்பட்டது. மேலும் இடையர் வீதியில் ரமேஷ் மற்றும் ஹரிஷ் தேவசி ஆகியோருக்கு சொந்தமான குடோனில் சுமார் 103 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.  இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவு மாதிரி எடுக்கபட்டு உணவு பகுப்பாய்விற்கு அனுப்பி உள்ளனர். உணவு பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு 7  லட்ச ரூபாய் வரை இருக்குமெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரண்டு குடோன்களும் தடை செய்யபட்ட  புகையிலை பொருட்களுடன் சீல் வைக்கப் படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

;