திருப்பூர், பிப். 21 – திருப்பூர் அருகே அவிநாசி பகுதியில் 19 பேர் பலியான விபத்தில் லாரி ஓட்டுநர் ஹேமந்த் ராஜ் திருப்பூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டார். அவிநாசி அருகே சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏகேவிஎன் மருத்துவமனை அருகில் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கேரள அரசுப் பேருந் தும், எதிர்திசையில் வந்த கண்டெய் னர் லாரியும் மோதி விபத்துக்குள் ளானது. இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந் தனர். லாரி ஓட்டுநர் தூங்கிவிட்டதால் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பரணைக் கடந்து எதிர் திசை யில் வந்த பேருந்து மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டு நர் அங்கிருந்து தப்பினார். இந்நிலையில் வெள்ளியன்று திருமுருகன் பூண்டி காவல் நிலையத் தார், லாரி ஓட்டுநர் ஹேமந்த் ராஜை திருப்பூர் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 3ல் ஆஜர்படுத்தினர். அங்கு நடுவர் அவரை 15 நாள் நீதிமன்றக் காவலலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஹேமந்த் ராஜை காவலர்கள் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.
3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
இவ்விபத்தில் 19 பேர் பலியான சம்பவத்தில் விபத்துக்கு காரணமான கண்டைனர் லாரி ஓட்டுநர் ஹேம ராஜ் என்பவர் மீது 279 , 337 , 304 (A ) என்ற மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.