tamilnadu

img

1512 அங்கன்வாடி ஊழியர்களுக்கு அலைபேசி

திருப்பூர், செப். 16 – தேசிய ஊட்டச்சத்து குழுமம் என்ற திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள 1512 அங்கன் வாடி மையப் பணியாளர்களுக்கு ரூ.1.51 கோடி மதிப்பில் அலைபேசிகள் வழங்கப் பட்டுள்ளன. இதற்கான நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை யில் நடைபெற்றது. இதில் மாநில அமைச் சர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அங் கன்வாடி பணியாளர்களுக்கு அலை பேசியை வழங்கினார். தேசிய ஊட்டச் சத்து குழும திட்டத்தில் பொதுப் பயன் பாட்டு மென்பொருள் மூலம் அங்கன்வாடி பணியாளர்கள் சிறப்பாக ஒருங்கிணைந்த முறையில் செயல்பட, கிராம மக்களுக்கு எளிய முறையில் சேவை செய்ய அலைபேசி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கள் குணசேகரன், நடராஜன், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சாந்தி நன்றி கூறினார். இக்கூட்ட நிகழ்வில் பங்கேற்க மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் வந்திருந்தனர். அவர்கள் கூட்ட அரங்கில் அமர இடம் இல்லாத நிலையில் நிகழ்ச்சி நடைபெற்றபோது, வெளியே இருக்கைகள் போட்டு அமர வைக்கப்பட்டனர். அதே சமயம் அமைச்சருடன் வந்த ஆளும் கட்சி பிரமுகர்கள் கூட்ட அரங்கில் அமர்ந்திருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;