tamilnadu

img

மலேசியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறதா?  விஞ்ஞானிகள் விளக்கம்...  

கோலாலம்பூர் 
உலகில் மார்ச் மாதத்திலிருந்து இன்று வரை கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் 190-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 2.31 கோடி மக்களை நோயாளிகளாக ஆகியுள்ள கொரோனா 8.03 லட்சம் பேரை காவு வாங்கியுள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கையை மறந்து பதற்றத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். இந்த பதற்றம் அடங்குவதற்குள் புதிய பதற்றமான செய்தி ஒன்று முளைத்துள்ளது. 

அது யாதெனில் மலேசியாவில் புதிய வகை கொரோனா ஸ்ட்ரெயின் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய வைரஸ் தொகுப்பு தற்போது உள்ளதை விட 10 மடங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய வகை கொரோனா (டி 614 ஜி மியூட்டேசன்) வைரஸ்  மலேசியாவில் சமையல்காரராக பணிபுரியும் இந்தியருக்கு கண்டுபிடிக்கப்பட்டதாக கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த நிலையில், இதனை இந்திய மருத்துவத்துறை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். புதிதாக உருவாகியுள்ள கொரோனா ஸ்ட்ரெயின் வகை வைரஸ் இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளில் தற்போதும் பரவலாக உள்ளது. இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய அறிவியல் கழகம் மற்றும் நுண்ணுயிரி அறவியல் துறையின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

;