tamilnadu

img

கொரோனாவுக்கு ஜெர்மனியில் தடுப்பூசி ரெடி?

பெர்லின்
கொரோனா வைரஸை அழிக்க உலகநாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மும்முரமாக உள்ளன. இதில் இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ள நிலையில், ஐரோப்பா கண்டத்தில் உள்ள வளமிக்க நாடான ஜெர்மனியில் கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

அந்நாட்டின் பயோன்டெக் மற்றும் அமெரிக்காவின் பைஸர் நிறுவனங்கள் இணைந்து கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை (ஆர்.என்.ஏ. தடுப்பூசி) மருத்துவ ரீதியில் பரிசோதிக்க ஜெர்மனியின் ஒழுங்குமுறை அமைப்பு (தி பால் என்ரிச் இன்ஸ்டிடியூட்) அனுமதி  அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில், ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய தடுப்பூசி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

;