tamilnadu

img

பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது.... 

ரியோ 
சுமார் 21 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசில் தென் அமெரிக்க கண்டத்தின் கொரோனா மையமாக உள்ளது. இந்நாட்டில் கொரோனா  தாறுமாறான வேகத்தில் பரவிவருகிறது. இந்தியாவைப் போன்று குறுகிய காலத்தில் அதிக பாதிப்பை சந்தித்துள்ளதால் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்பது புரியாமல் அந்நாட்டு அரசு விழித்து வருகிறது. 

இந்நிலையில் பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏப்ரல் 20-ஆம் தேதி வரை அந்நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் கொஞ்சம் கட்டுப்பாட்டில் இருந்தது. ஏப்ரல்  25-ஆம் தேதியிலிருந்து இன்று வரை கொரோனா உயிரிழப்புகள் கணிக்க முடியாத அளவிற்கு ஜெட் உயர்ந்து வருகிறது. இதுவரை அங்கு 30 ஆயிரத்து 46 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 800-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். உலகளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் பிரேசில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்னர். 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் கொரோனவாலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகைது 

;