tamilnadu

img

கொரோனா வைரஸ் : சீனா அதிரடி திட்டம்

பெய்ஜிங்
விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ள கொரோனா என்னும் கொடிய வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. சீனா மட்டுமின்றி 27 நாடுகளில் தன்னுடைய வேலையைக் காட்டியுள்ள கொரோனா வைரஸ் 2 சொகுசு கப்பல்களை நடுக்கடலில் நிற்க வைத்து உலகை மிரட்டி வருகிறது. 

சுவாசம் மூலம் எளிதாகப் பரவுவதால் இந்த ஆட்கொல்லி வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு ராணுவத்தைக் களமிறங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,483-ஆக அதிகரித்துள்ளது. 
இந்நிலையில், சீன ஸ்மார்ட் போன் ஆப் நிறுவனம் தங்களுக்கு அருகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கிறார்களா? இல்லையா என்பதைக் கண்டறிய புதிய ஆப் ஒன்றை வெளியிடவுள்ளது. இந்த ஆப் சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நபரைத் துல்லியமாகக் காண்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆப்பிற்கு ஸ்மார்ட்போன் சிம் நம்பர், நபரின் பெயர் மற்றும் இ-மெயில் ஐ.டி எண் போன்றவை தேவைப்படும். இது ஆப் திங்களன்று மாலை (சீன நேரப்படி) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா அகாடமி ஆப் இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் டெக்னாலஜி  இந்த ஆப்-பை உருவாக்கியுள்ளது. இந்த அதிரடி திட்டத்தால் சீன மக்கள் சற்று நிம்மதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

;